உள்ளாட்சி தேர்தல் பணி: குமரியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் பணி: குமரியில் அதிமுக ஆலோசனை கூட்டம்
X

நாகர்கோவில் மாநகர அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் குமரியில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர அதிமுக சார்பில் உள்கட்சி பலம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

நாகர்கோவில் மாநகர செயலாளர் சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி அடையவும் நாகர்கோவில் மாநகரத்தில் அதிமுகவை பலம் பெறச் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மனைவி மறைந்த விஜயலட்சுமி அம்மையாருக்கும் நாகர்கோவில் 11 ஆவது வார்டு உறுப்பினர் மறைந்த ஐயம்பெருமாள் பிள்ளை ஆகியோருக்கும் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் தேர்தல் வெற்றி வியூகம் குறித்த நடவடிக்கைகளை அதிமுக மேற்கொண்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!