15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

பைல் படம்

குமரியில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக போலி சாமியாரின் மனைவி போலீசில் புகார் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்மணி இன்று நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் நான் கணவரோடு வாழ்ந்து உடல் நலமில்லாமல் என் கணவர் இறந்த பின்பு என் குழந்தையோடு தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதனை சரி செய்வதற்காக குளச்சலில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பரிகார பூஜை செய்து கொடுத்து வரும் ராஜேஷ்வரன் என்ற சாமியாரை சென்று சந்திக்க சென்றேன்.

அந்த சாமியார் குழந்தைக்கு பரிகார பூஜை என்ற பெயரில் எனக்கு பரிகார பூஜை செய்து தன்னை மனைவியாக்கி கொண்டார், முறையாக திருமண பதிவு செய்யாமல் அவர் என்னோடு வாழ்ந்தார்.

தற்போது அவர் என்னை போன்று 15 க்கும் மேற்பட்ட பெண்களோடு தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது, அவர்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை சுருட்டி வருகிறார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு பல பெண்களை மயக்கி லீலைகளில் ஈடுபட்ட போலி சாமியார் குறித்த பதிவை நான் வெளியிட்டும் கூட அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!