குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.

குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.
X

குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கேரளாவுடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க நடைபெற்ற மொழிப்போர் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 53 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தற்போது கொரோனா விதிமுறைகள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு சார்பில் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் பத்பநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் விஜயதாரணி ஆகியோரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்