சசிகலா தலைமை தேவை - போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரால் பரபரப்பு.
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவின் பொது செயலாளராகவும் தமிழக முதல்வருமான இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.இதனிடையே நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் தலையில் செயல்படும் அதிமுகவில் மாநில தலைமை முதல் மாவட்ட தலைமை வரை குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு உள்ளார் என்றும் எந்த காலத்திலும் சசிகலா அதிமுக உறுப்பினர் ஆக முடியாது என்றும் எத்தனை சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் அதிமுக தலைவர்கள் ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சசிகலா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என கூறி போஸ்டர் அடித்து ஒட்டிய தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ஏற்கனவே அதிமுக ஆளும் அரசாக இருக்கும் போது இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது மாவட்டத்தில் அதிமுகவில் இருக்கும் உள்கட்சி பூசலை வெளிப்படையாக காட்டியது.
இந்நிலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அஇஅதிமுக பொதுச்செயலாளரே எங்கள் தலைமையே சின்னம்மா உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
#கன்னியாகுமரி #நாகர்கோவில் #அதிமுக #போஸ்டர் #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #KANYAKUMARI #NAGERCOIL #ADMK #POSTER #INSTANEWS #TAMILNADU #leadership #Sasikala #demand
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu