கெடுபிடியால் கடும் பாதிப்பு: திருமண மண்டப உரிமையாளர்கள் அதிருப்தி

கெடுபிடியால் கடும் பாதிப்பு: திருமண மண்டப உரிமையாளர்கள் அதிருப்தி
X

 திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

பல்வேறு கெடுபிடியால் திருமண மண்டபங்களை நடத்த முடியாமல் உள்ளதாக, குமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் குற்றச்சாட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருமண மண்டபங்களை நடத்த முடியாத நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும் திருமண மண்டபங்களில் தொழில் வரி கேட்டும், பல்வேறு லைசன்ஸ் வாங்க மற்றும் புதுபிக்க சென்றால், மாநகராட்சி, நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், தீயணைப்புத்துறையினரும் கொடுக்கும் நெருக்கடி மற்றும் கெடுபிடிகளால் திருமண மண்டபங்களை நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மண்டப உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story