கோவில் திருவிழாவில் 3 பேரிடம் நகை திருட்டு

கோவில் திருவிழாவில் 3 பேரிடம் நகை திருட்டு
X

கோவில் திருவிழாவில் 2 குழந்தைகள் உள்பட 3 பேரிடம் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் தனது பேரன் , பேத்தி ஆகியோரை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள கோயில் திருவிழாவை காண சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் அவரது குழந்தைகள் அணிந்திருந்த கை சங்கிலி, இரண்டு தங்க காப்பு ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர்.

இதே போல் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி (72) என்பவரின் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story