நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
X

நாககர்கோவில் மாநகர பகுதிகளில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

தொடர் புகார்களை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பல்வேறு பகுதிகளில் சாலையோர நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக பல கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி இன்றைய தினம் நாகராஜா கோவில் ரத வீதிகள், அவ்வை சண்முகம் சாலை, அண்ணா பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகரின் பிற பகுதிகளிலும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.

இதனிடையே மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் உடனடியாக தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா