குமரியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்

குமரியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்
X

குமரியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வயதான அரசு ஊழியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமரியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வயதான அரசு ஊழியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு 2000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கி வருவதாகவும்.

இது தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு கூட காணாது என்ற நிலையில் பணியில் இருக்கும் போது சத்துணவு கூட உணவை உண்டு வாழ்ந்த தாங்கள் இப்போது ஒரு வேளை உணவு கூட இன்றி தவிப்பதாக கூறியும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்ஊதியத்தை அரசு உடனடியாக வழங்க கூறியும்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வயதான ஊழியர்கள் ஊன்றுகோளுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வயதான ஊழியர் ஒருவர் 37 வருடங்களாக அரசிடம் பணியாற்றிய தங்களை அரசு கோமாளியாக ஆக்கி இருப்பதாக கூறி கோமாளியை போன்று நடித்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags

Next Story
ai healthcare products