குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.

குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.
X

கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா பரவல் உச்சம் தொட்டு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க போலீசார், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 48 சோதனை சாவடிகளை அமைந்துள்ள போலீசார் 24 மணி நேர தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1614 பேருக்கும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 37 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 08 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 08 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
future of ai in retail