வீடு தேடி வரும் தடுப்பூசி வாகனம்: நாகர்கோவில் மாநகராட்சியில் துவக்கம்

வீடு தேடி வரும் தடுப்பூசி வாகனம்: நாகர்கோவில் மாநகராட்சியில் துவக்கம்
X

நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

நாகர்கோவிலில் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் முறையை தொடங்கியது மாநகராட்சி.

கொரோனா பெரும் தொற்றை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசியானது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டிய பொதுமக்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தற்போது குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு முழுமையாக நீங்கி 24 மணி நேரமும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளது.

ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதோடு தடுப்பூசியை போட மாட்டோம் என்ற நிலையில் இருந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் படி நாகர்கோவில் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பணியை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!