தமிழகத்துடன் குமரி இணைந்தநாள் - அரசு சார்பில் தியாயிகளுக்கு மரியாதை
நாகர்கோவிலில் மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 9 தாலுகாக்களில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையில் பாதி பகுதியும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து, 65 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டம் உதயமாக காரணமாக இருந்த தியாகிகள் மற்றும் முன்னணி தலைவர்களை நினைவு கூறும் வகையில் மொழிப்போர் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மார்ஷல் நேசமணி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்படி, நாகர்கோவிலில் மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu