இந்து ஆலய விழாக்கள் நடத்த அனுமதி - பொன்னார் கோரிக்கை

இந்து ஆலய விழாக்கள் நடத்த அனுமதி - பொன்னார் கோரிக்கை
X

இந்து ஆலய விழாக்களை வழக்கம் போல் நடத்திட அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் எஸ்பி., மற்றும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் ஏராளமான இந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனால், கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து இந்து ஆலயங்களுக்கான விழாக்களை வழக்கம்போல் நடத்திட மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!