ஆரோக்கியமான இந்தியா: விழிப்புணர்வு நடனம் ஆடி அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்
நடனம் ஆடும் மாணவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி சார்பில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கொரோனா நோய்தொற்று காலத்தில் வீட்டில் முடங்கி இருந்து பல்வேறு சூழ்நிலையில் மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் அந்த நிலையை மாற்றி சகஜ நிலைக்கு வரவேண்டும். போதைப் பழக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான இந்தியாவையும் ஆரோக்கியமான உடலையும் காக்க முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நடன நிகழ்ச்சியை சாலையில் செல்பவர்கள் பார்த்து சென்ற நிலையில் நடன நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu