ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
X

தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியை சமரசம் செய்து அழைத்துவரும் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடக்க முடியாத நிலையிலும் தட்டுத் தடுமாறி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

வயது முதிர்ந்த காலத்தில் தன்னை ஏமாற்றி ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை உறவினர்கள் அபகரித்து விட்டதாக கூறியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மூதாட்டியிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா