சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட வாலிபர்.

குமரியில் காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்தாண்டம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் அபி (19). இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பது போல நடித்து, வீட்டிற்கே சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ம் தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மார்தாண்டத்தை சேர்ந்த அபி தான் சிறுமியை கடத்திச் சென்றதை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்ட போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்று அபி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதே போன்று பல பெண்களை காதலித்து காதல் ரோமியோவாக அபி இருந்தும் தெரியவந்தது. குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture