குமரி நாகராஜா கோவிலில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா

குமரி நாகராஜா கோவிலில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா
X

குமரி நாகராஜா கோவில்.

நாகர்கோவில் பெயர் வர காரணமாக அமைந்த நாகராஜா கோவில் தை திருவிழாவை முன்னிட்டு கால் நாட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு அப்பெயர் வர காரணமாக அமைந்த பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான தை திருவிழா வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் தைத்திருவிழாவிற்கான கால்கோள் விழா இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வேத விற்பன்னர்களின் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கோயில் நிர்வாகிகள், குமரிமாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திர மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture