எகிறிய மல்லி, பிச்சி, அரளி பூக்கள் விலை..! தோவாளை பூ மார்க்கெட் அப்டேட்!
ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதைப் போல கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது.
இதனால் நேற்றே பூக்களை வாங்கி வைக்கும் நிலைமை ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்னதாகவே பூக்களை வாங்க பலரும் நினைத்ததால் பூக்களுக்கான டிமான்ட் எகிறியுள்ளது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளன. இந்த இரண்டு பண்டிகைகளிலும் வீடுகள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பூக்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
தோவாளை மலர் சந்தையில் கடந்த வாரம் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூவின் விலை தற்போது கிலோ 750ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
750 ரூபாய்க்கு கடந்த வாரம் விற்கப்பட்ட மல்லிகைப்பூ இந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் அரளிப்பூ கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் அதன் விலை கிலோ 170ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாடாமல்லி கிலோ 70 க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி பூக்கள் கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சம்பங்கி பூ கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், ஆயுதபூஜையின்போது பயன்படுத்தக்கூடிய பூஜை பொருட்களும் விலை அதிகமாகியுள்ளது. வாழைத்தார், பூசணி, அவல், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
பூக்கள் விலை உயர்வால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையிலும், பண்டிகை கொண்டாடி ஆக வேண்டும் என்பதால் பூக்கள் விலை அதிகமாக இருந்தாலும் வியாபாரம் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu