கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம்: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம்: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
X

மாதிரி படம் 

நாகர்கோவில் மாநகரில் கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொடர் மழை காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சியில் 293 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர், ஒவ்வொருவரும் தினமும் 50 வீடுகளை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா? இல்லையா? என அறிக்கை கொடுக்க வேண்டும்.

மேலும் காலி மனைகள், புதிய வீடுகள் கட்டும் இடங்கள், வணிக நிறுவனங்களின் மொட்டை மாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி காரணிகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வீடுகளில் ஆய்வின்போது கொசு புழு உற்பத்தி இருக்குமானால் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் ஆணையர் ஆஷா அஜித்அறிவுறுத்தி உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!