அரசு பேருந்து மோதி பெண் அதிகாரி பலி

அரசு பேருந்து மோதி பெண் அதிகாரி பலி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கங்கார்டியா பள்ளி அருகே உள்ள தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா ஜெனட் (42) டாக்டரான இவர் கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீடு அமைந்த தெருவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி ஸ்டெல்லா ஜெனர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். டாக்டரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரியுமான ஸ்டெல்லா ஜெனட் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story