சாய்ந்த மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்.

சாய்ந்த  மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்.
X

சாய்ந்த மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்

குமரியில் சரிந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் கயிறு கட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது சங்குதுறை கடற்கரை.நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலமாக சங்கத்துறை பீச்க்கு நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக அளவிலானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிப்பதுண்டு.இது உள்ளூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது, இந்நிலையில் கடற்கரை சாலை அருகேயுள்ள மின் கம்பம், முழுவதுமாக சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும் அதனை பொருட்படுத்தாத மின்சார வாரியம் மின் கம்பத்தை கயிறு கட்டி தாங்கல் கொடுத்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர், மேலும் ஆபத்து ஏற்படும் முன் உடனடியாக மின் கம்பத்தை மாற்றி சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
highest paying ai jobs