தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
X

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று திடீரென ஆஜரானார்.

தேர்தல் விதி மீறல் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் நீதி மன்றத்தில் பொன். இராதாகிருஷ்ணன் ஆஜரானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொன். இராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொன். இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் அமர்வு1 நீதிமன்றத்தில் ஆஜரானார். பொன். இராதாகிருஷ்ணனின் திடீர் வருகையால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா