தேர்தல் புகார்களை செலவின பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் - குமரி கலெக்டர்

கன்னியாகுமரி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இதற்காக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சந்தீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் குறித்து பொதுமக்கள் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் அதிகாரியை சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரையிலும் புகார்களை தெரிவிக்கலாம்.கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளராக விகாஸ்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை தினமும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம் .
மேலும் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை பொதுமக்கள் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu