நாகர்கோவிலில் ரகளை.. போதையில் ஆட்டம் போட்ட இளம்பெண்!

நாகர்கோவிலில் ரகளை.. போதையில் ஆட்டம் போட்ட இளம்பெண்!
X
நாகர்கோவிலில் போதையில் ஆட்டம் போட்ட இளம்பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறையினர்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதையில் ஆட்டம் போட்ட Drunken Young Girl at Nagercoil Railway ஜங்ஷன் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. பின் போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி ரயிலில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் போதையில் ரகளை செய்த பெண்ணை காவல்துறையினர் கண்டித்து அனுப்பி வைத்தனர். இவர் காலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் ரகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் காலையில் 28 வயு மதிக்கத்தக்க இளம்பெண் ரகளை செய்து வந்தார். அங்குள்ள பயணிகளில் அத்துமீறி நடப்பது போன்ற செயல்களை செய்ததாக கூறப்படுகிறது. தலைக்கேறிய போதையில் தன்னிலை மறந்து அவர் போட்ட ஆட்டத்தால் வடசேரி பேருந்து நிலையமே பரபரப்பானது.

போதையின் ஆக்கிரமிப்பால் தன் மேலாடையைக் கழற்ற முயற்சி செய்த அந்த பெண்ணின் செயல்களால் முகம் சுழித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக பேருந்து நிலையத்துக்குள் வந்த காவலர்கள் விசாரணை செய்தனர். அதில் அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. நாகர்கோவிலில் ஒரு பிரபல ஹோட்டலில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.

காவலர்கள் அவரை சமாதானம் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் பேருந்தில் ஏற மறுத்துவிட்டார். பல மணி நேரமாக அவருடன் பேசிக்கொண்டே இருந்த காவல்துறையினர் இடையில் அவரது உறவினர் மொபைல் நம்பர் வாங்கி அவரையும் அழைத்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.

பேருந்து நிலையத்துக்கு வந்த உறவினரும் அவரிடம் பலமுறை பேசி பார்த்தும் பலனில்லை. ஒருவழியாக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே சென்றார் அவர். இதனால் பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். ஆனால் அதே இளம்பெண் இரவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரகளை செய்து பரபரப்பாக்கினார்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் அவரை அனுப்பி வைக்க காவலர்கள் முயன்றனர். ஆனால் ரயில்வே நிலையத்துக்குள்ளேயும் அவர் ரகளை செய்தார். நடைமேடையில் உருண்டு புரண்ட அவர், பொதுமக்களிடம் வம்பு செய்து கொண்டிருந்தார்.

இதனால் காவல்துறையினர் கடுப்பாகி அவரிடம் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என கண்டித்தனர். அதற்கும் செவிமடுக்காத அந்த இளம்பெண், ரயிலில் ஏற மறுத்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். இது சரிபட்டு வராது என மகளிர் காவலர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து குண்டுக்கட்டாக தூக்கி ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த இளம்பெண் இப்படி நாகர்கோவிலில் ரகளை செய்வது இது முதல்முறையல்ல. Drunken Young Girl at Nagercoil Railway ஜங்ஷன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோல இவர் ரகளை செய்த நிலையில், எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!