பாதாள சாக்கடை திட்ட பணியால் ஆற்று நீர் போல் சாலையில் ஓடிய குடிநீர்

பாதாள சாக்கடை திட்ட பணியால் ஆற்று நீர் போல் சாலையில் ஓடிய குடிநீர்
X
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் ஓடும் குடிநீர்.
குமரியில் பாதாள சாக்கடை திட்ட பணியால் ஆற்று நீர் போல் குடிநீர் சாலையில் ஓடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன. ஐந்து வருடங்களில் முடிக்கப்படும் என கூறி தொடங்கப்பட்ட இந்தப் பணியானது 10 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே சாலைகள் மிக மோசமாக இருந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் பாதாளச் சாக்கடைப் திட்டத்துக்காக தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் காட்சி அளிப்பதோடு பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்து வருகின்றது.

இது குறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை மேற்கொண்டு நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாதாள சாக்கடை தோண்டப்பட்ட சாலையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் ஆற்று வெள்ளம் போல் சாலையில் ஓடின.

இதனால் அப்பகுதி சேறும் சகதியுமாக ஆன நிலையில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்த பின்னரும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்காத நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!