வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம்

வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு வீடாக கபசுர குடிநீரை சுகாதார அதிகாரிகள் வினியோகம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வல்லங்குமாரன்விளை வாட்டர் டேங்க் பகுதியிலும், வடசேரி புதுத்தெருவில் 4 குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

தொடர்ந்து அந்த பகுதிகள் கட்டுப்படுத்தபட்ட பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வல்லங்குமாரன்விளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனை சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை பொது மக்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்