குழாய் உடைப்பால் 10 நாட்கள் குடிநீர் 'கட்' : நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு

குழாய் உடைப்பால் 10 நாட்கள் குடிநீர் கட் :  நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு
X
குழாயில் ஏற்பட்டுள்ள பழுதால் மாநகர பகுதிகளில் 10 நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குழாயில் ஈசாந்திமங்கலம், பூதப்பாண்டி சாலை, நாவல் காடு-மாங்குளம் சந்திப்பு, இறச்சகுளம்- மாடன் கோவில் வடக்குப்பகுதி ஆகிய இடங்களில் உடைப்பும், பழுதும் ஏற்பட்டுள்ளது.

மேற்படி பழுதினை சரி செய்யும் பணிகள் இன்று முதல் நடைபெற உள்ளதால், நாகர்கோவில் மாநகரில் வடசேரி, ஒழுகினசேரி, இடலாக்குடி மற்றும் வடிவீஸ்வரம் ஆகிய பகுதிகளில் அடுத்த 10 நாட்கள் வரை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!