திமுக, காங்கிரஸ் பொய் பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக, காங்கிரஸ் பொய் பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்
X

அரசால் வராது என அறிவிக்கப்பட்ட வர்த்தகத் துறைமுகம் வரும் என கூறி திமுக, காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தோவாளை, வெள்ளமடம் ஆரல்வாய்மொழி, மருங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய பொன்ராதாகிருஷ்ணன், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது. எப்போது கீழே விழும் என தெரியவில்லை என்று கூறிய காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பின் அதே பாலத்தில் சென்று நன்றி தெரிவித்தனர். இப்போது அரசால் வராது என அறிவிக்கப்பட்ட வர்த்தகத் துறைமுகம் வரும் என கூறி திமுக காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!