ஆ.ராசாவின் பேச்சிற்கு திமுக தலைமை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை: எம்.ஆர்.காந்தி

ஆ.ராசாவின் பேச்சிற்கு  திமுக தலைமை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை: எம்.ஆர்.காந்தி
X
திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறிதான் - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி.

நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளிவிளை, வாத்தியார்விளை, அருகுவிளை, கிருஷ்ணன்கோவில் வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அவர் சென்ற இடமெல்லாம் பட்டாசு வெடித்து மலர்மாலை அணிவித்தும் வரவேற்ற பொதுமக்கள் மத்தியில் பேசும் போது பெண்களை தரகுறைவாகவும் இழிவு படுத்தி பேசி தாக்குவது திமுகவின் வழக்கம், இப்போது சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி கே பழனிச்சாமியின் தாய் குறித்த தவறான வார்த்தைகளால் திமுகவின் முக்கிய நிர்வாகியான ஆ.ராசா தெரிவித்து உள்ளார்,

இதற்கு திமுக தலைமை எந்த வருத்தமும் தெரிவிக்க வில்லை, திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான் அதிமுக கூட்டணி மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை காக்கும் அரசு என தெரிவித்தார்.

Tags

Next Story