100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி

100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
X

பொதுமக்களிடம் மனு பெறும் போலீஸ் அதிகாரிகள். 

குமரியில் 100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி காட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து 800 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன்படி பெறப்பட்ட மனுக்களில் 150 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வைத்து விசாரணை மேற்கொண்டு முடித்து வைக்கப்பட்டது.

மேலும் பெறப்பட்ட மனுக்கள் அதிகமாக இருந்ததால் இன்றைய தினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாபெரும் பெட்டிசன் மேளா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இதில் அந்தந்த காவல் நிலையங்களில் அதிகாரிகள் பங்கேற்று பெறப்பட்ட மனுக்களிலிருந்து 100 மனுக்களின் மீது விசாரணயை முடிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று பொதுமக்கள் அளித்த சில மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தபடும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்