மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி
X
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்றின் வேகம் குறைந்து தற்போது மாவட்டத்தில் 532 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது, அதன்படி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்தல், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் என பல்வேறு மக்கள் நலப் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. மாநகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

Tags

Next Story
ai marketing future