அரசு பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு

அரசு பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு
X

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு மூன்று இலக்க எண்ணிக்கையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மக்கள் அதிகம் வரக்கூடிய மார்க்கெட், பேருந்து நிலையம் உட்பட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!