குமரி கோவிலில் சூர சம்ஹாரம் அன்று பக்தர்கள் தங்க, தரிசனம் செய்ய தடை

பைல் படம்.
ஆணவம் கொண்டு தேவர்களையும் மக்களையும் கொடுமைப்படுத்திய சூரனை தமிழ் கடவுளான முருகர் சம்ஹாரம் செய்ததாகவும், சூரனுடன் முருக படைகள் 6 நாட்கள் போரிட்டு இறுதியில் திருச்செந்தூரில் மாமரமாக மாறி நின்ற சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து சேவல் கொடியாகவும் மயிலாகவும் மாற்றி தன்னோடு வைத்ததாகவும் புராணம் கூறுகிறது.
சூரனுடன் போர் தொடங்கி சம்ஹாரம் வரையிலான 6 நாட்களில் உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி நாளாக கடைபிடித்து விரதம் மேற்கொள்கின்றனர்.
அதன்படி விரதம் மேற்கொண்டால் தீராத வினைகள் தீரும்; துன்பங்கள் விலகி மகிழ்ச்சி கிடைக்கும்; குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் உள்ள பால முருகன் சன்னதியில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
முன்னதாக சிறப்பு அபிஷேகங்களுடன் தொடங்கிய இந்த கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புக்கட்டி தங்கள் விரதத்தை தொடங்கினர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவிலிலேயே 6 நாட்கள் தங்கியிருந்து முருகன் திருப்புகழ் பாடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூர சம்ஹாரம் அன்று மட்டும் கோவிலில் பக்தர்கள் தங்கவும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிப்பதாகவும் இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu