டெங்கு பரவல் தடுப்பு பணி: பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

டெங்கு பரவல் தடுப்பு பணி: பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
X

கொசு மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தொடர் மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

வீடுகள், கல்வி நிறுவனங்களில் உடைந்து கிடக்கும் பொருட்களில் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகிறது.

இந்நிலையில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் வீடுகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொசு மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture