போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகள்: மாநகராட்சி அதிரடி

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகள்: மாநகராட்சி அதிரடி
X

நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் கோசாலையில் ஒப்படைத்தனர்.

நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் கோசாலையில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிவதாக மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

இதனை தொடர்ந்து மாநகர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து இதுபோன்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் மாடுகளை விடக்கூடாது என கூறி அறிவுரை வழங்கினர்.

ஆனாலும் மாடுகள் தொடர்ந்து மாநகராட்சி சாலை பகுதிகளில் வருவதோடு சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதோடு விபத்துக்களை ஏற்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனைத் தொடர்ந்து மாடுகளை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் விட்டால் அந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நாகர்கோவில் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தொடர்ந்து மாநகர பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிந்து கொண்டு இருந்த நிலையில் மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த அதிகாரிகள் அதனை கோசாலையில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai future project