கொரோனா விதிமுறை கடைபிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம்

கொரோனா விதிமுறை கடைபிடிக்காத   பெட்ரோல் பங்கிற்கு அபராதம்
X
நாகர்கோவிலில் கொரோனா விதி முறைகளை கடை பிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம், சமூக இடைவெளி மிகவும் அவசியம் ஆகும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், தியாகராஜன், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கோட்டாறு பகுதியில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் நேற்று நடத்தினர். ஆய்வில் அந்த பெட்ரோல் பங்கில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனால், அந்த பங்கிற்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணியாதவர்கள், கொரோனா விதிமுறைகள் பின்பற்றாத 17 பேரிடம் இருந்து ரூ.3400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Tags

Next Story