குமரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் - தாசில்தார்.
விதிமுறையை மீறி திறந்திருந்த கடை.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் செயல்பட்டு வரும் பிரபல ஐஸ்கிரீம் கடை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.
இதனை அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசிலா மற்றும் நேசமணிநகர் காவல் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் அங்கு சென்று விதிமுறையை மீறி திறந்திருந்த கடைக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து கடையை அடைத்தனர்.
மேலும் இதுபோன்று அரசின் விதிமுறைகளை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu