குமரியில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்.

குமரியில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்.
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 படுக்கை வசதிகளுடன் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அகத்திய முனி தனியார் மருத்துவமனையில் மாவட்டத்தில் முதன் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது

20 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 12 படுக்கைகள் என 32 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், தொற்றை போக்க மேற்கொள்ளப்படும் மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட பிரிவை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!