காய்கறி வரவில்லையா போன் பண்ணுங்க - நாகர்கோவில் மாநகராட்சி...

காய்கறி வரவில்லையா போன் பண்ணுங்க - நாகர்கோவில் மாநகராட்சி...
X
காய்கறிகள் விற்பனை செய்யும் வாகனங்கள் வரவில்லை நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு குமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த முழு ஊரடங்கில் நாகர்கோவில் மாநகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாநகராட்சியால் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி காய்கறிகள் அனைத்தும் ரூபாய்: 100 மற்றும் 200 என்ற தொகுப்பாக விநியோகம் செய்யப்படும். மாநகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்கள் வரும் என தெரிவித்து உள்ளது.

மேலும் உங்களின் பகுதிக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் வாகனங்கள் வரவில்லை எனில் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் 04652 230984 அல்லது வாட்ஸ் அப் எண் 9487038984 க்கு தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்