நாகர்கோவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி

நாகர்கோவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் -  மாநகராட்சி அதிரடி
X

 நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நாகர்கோவில் மாநகராட்சி அகற்றியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள், மற்றும் நடைப்பாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றைய தினம் நாகர்கோவில் வடசேரி முதல் சிபிஎச் வரை உள்ள அசம்பு சாலை மற்றும் வடசேரி முதல் பார்வதிபுரம் வரை உள்ள சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றன.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!