விதிமுறை மீறல் - 5000 அபராதம் விதித்த மாநகராட்சி

விதிமுறை மீறல் - 5000 அபராதம் விதித்த மாநகராட்சி
X
நாகர்கோவிலில் அரசின் விதிமுறையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்து இருந்தார்.

மேலும் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணிற்கு 9487038984 புகார் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகரில் அரசின் விதிமுறைகளை மீறி வட இந்தியர்களால் நடத்தப்படும் ஜவுளிக்கடை செயல்படுவதாகவும் இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த கடையை கண்காணித்த மாநகராட்சி அதிகாரிகள் கடையின் பின்னால் ஷட்டரை திறந்து பொதுமக்களை கடைக்குள் அனுமதித்து வியாபாரம் நடைபெறுவதை கண்காணித்தனர்.

இதனை தொடர்ந்து அதிரடியாக அந்த கடைக்குள் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர். இந்த கடை ஏற்கனவே அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக அபராதம் விதித்த அதிகாரிகள் மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil