கொரோனா தடுப்பூசி- தொழிலாளர்கள் விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி- தொழிலாளர்கள் விழிப்புணர்வு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட சுமை தூக்கும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஐயப்பன் தலைமையில் சங்க உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!