குமரியில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

குமரியில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

குமரியில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

குமரியில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று முதல் மூன்று அலைகளை கடந்து வந்துள்ள நிலையில் அதற்கான எதிர்ப்பு மருந்தாக கொரோனா தடுப்பூசி உள்ளது.

இதனை அனைத்து தரப்பினருக்கும் செலுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே குமரியில் சிறார்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் சுகாதார துறை சார்பில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதில் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொரோனா இல்லாத மாவட்டமாக குமரிமாவட்டம் உருவாகி உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!