கொரோனா நோயாளி வருகை: மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா நோயாளி வருகை: மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் கொரோனா பரிசோதனை கொடுத்துவிட்டு தனது அலுவலக பணி சம்பந்தமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வந்து சென்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதன்படி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!