சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா
X
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துமனைகள் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!