மது போதையில் பணிக்கு வந்ததால் சஸ்பெண்ட்: வேலை கேட்டு வாசலில் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் அமைந்துள்ளது பெரியசாமி பாண்டியன் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், இங்கே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
சீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வரும் நிலையில் பணியில் இருக்கும்போது மது அருந்தி வந்ததால் ஏற்கனவே இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே பணியின் போது மீண்டும் மது அருந்தி வந்து பணியாற்றியதாக கூறப்படுகின்றது, இதனால் மூன்றாவது முறையாக ஸ்ரீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே இன்று கூட்டுறவு சங்கத்திற்கு வந்த சீனிவாசன் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனக்கு மீண்டும் பணி வழங்க கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலக வாயிலில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டுறவு சங்க அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் சீனிவாசனை அங்கிருந்து வெளியேற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu