குமரியில் தொடர் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரியில் தொடர் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X

குமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குமரியில் பெய்து வரும் அடைமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது, வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலான மழை கொட்டி தீர்த்தது, சுமார் 2 மணி நேரங்களை கடந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது 3500 கன அடி உபரி நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மழை தொடர்ந்தால் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா