நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: ஆணையர் நேரில் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: ஆணையர் நேரில் ஆய்வு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு உத்தரவுப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் புத்தன் அணை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருணத்தில் உள்ளது.

மேலும் கடந்த சில மாதத்திற்கு முன் குமரியில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சாலைகள் முழுவதும் பெரும் சேதம் அடைந்தது.

இதனைத்தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு 26 கோடி ஒதுக்கீடு செய்து அதன்படி சாலைகள் போடும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இதனிடையே ஏற்கனவே இருக்கும் சாலைக்கு மேல் தரமற்ற முறையில் சாலை அமைக்க கூடாது. பழைய சாலைகளை பெயர்த்து எடுத்த பின்னரே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது புதிய சாலைகள் மிகுந்த தரத்துடன் அமைக்க வேண்டும், சாலை அமைத்த பின்னர் மழைநீர் சாலையில் இருந்து வடிந்து மழைநீர் வடிகாலுக்கு செல்லும் வகையில் சாலைகள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!