பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்

பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட யானை

குமரியில், உரிய அனுமதி பெறாமல் நகைக்கடை விழாவுக்கு கொண்டு வரப்பட்ட 2 யானைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பிரபல தனியார் நிறுவன நகை கடையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து, பொதுமக்களை கவரும் வகையில், உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டு வித்தை காட்டிய இரண்டு யானைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெரும் பரபரப்புக்கு உள்ளாகி இருந்தது. தற்போது விதிமுறைகளை மீறி, எந்த முன்னறிவிப்பும் இன்றி யானைகளை கொண்டு வந்து சாலையில் வித்தை காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும், இது சட்டத்தை மீறிம் செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!