இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு

இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு
X
குமரியில் இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, கோட்டார் , பெருவிளை, செட்டிகுளம் கன்னியாகுமரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட அருந்த இலவச வீட்டுமனை கேட்டு குமரி மாவட்ட ஆட்சியரிடமும், நாகர்கோவிலில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியரிடமும் பலமுறை மனு அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது, இதனிடையே இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் மனு அளித்து விட்டு வெளியே வந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர், இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!