மாநகராட்சி சார்பில் புதிய தார்சாலைகள் - ஆணையர் நேரில் ஆய்வு

மாநகராட்சி சார்பில் புதிய தார்சாலைகள் - ஆணையர் நேரில் ஆய்வு
X
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் புதிய சாலை பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு நீண்டகாலமாக புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. இதனிடையே தோண்டப்பட்ட சாலைகளை சீரமைத்து புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி புதிய சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது, அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட 23 புதிய சாலைகள் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு 10 கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களுக்கு தரமான சாலைகளை அளிக்க வேண்டும் என சாலை போடும் பணியின் தொடக்கத்தின் போதே மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார், மேலும் சாலைகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாநகராட்சியில் போடப்படும் அனைத்து சாலைகளும் மிகுந்த தரத்துடன் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!